பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சோனு குமார்(22). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சோனு குமாருக்கும் 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சோனு குமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. சிறிது நேரத்தில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து பெற்றோர் விசாரித்த போது சிறுமி நடந்த உண்மையை கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சோனு குமாரை கைது செய்தனர்.