
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அச்சம்பேட்டில் என்னும் பகுதியில் டைல்ஸ் ஷாப் ஒன்று இருக்கிறது. இங்கு 2 பெண்கள் துப்புரவு வேலை பார்த்து வருகின்றனர். இதையடுத்து இவர்கள் 2 பேருக்கும் அந்தக் கடையின் ஓனர்கள் 2 பேர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவ நாளன்று பணிப்பெண்கள் 2 பேரும் வேலை முடிந்தவுடன் வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது கடையின் ஓனர்கள் அந்தப் பணிப்பெண் 2 பேரையும் பிடித்து வலுக்கட்டாயமாக அவர்களுக்கு மதுவை கொடுத்தனர். அதன்பின் அவர்கள் 2 பேரையும் காரில் ஏற்றி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட 2 பணிப்பெண்களும் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். மேலும் காவல்துறையினர் புகாரியின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.