இந்தியாவில் பெரும்பாலான சாலை விபத்துக்கள் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் நடைபெறுகின்றன. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகம். எனவே சாலை விபத்துக்களை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் புதுவிதமான சட்டங்களை இயற்றி வாகன ஓட்டிகளை எச்சரித்து வருகின்றன. இந்த நிலையில் சாலை விபத்துகளை தடுக்க கேரளா அரசு புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது.

அதாவது வாகனம் ஓட்டும்போது பின் இருக்கையில் அமர்ந்து பேசுவது தண்டனைக்குரிய குற்றமாகும். விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும். இந்த குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த புதிய விதியை கடுமையாக அமல்படுத்த போக்குவரத்து போலீசாருக்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.