
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.
இது கூட இல்லை என்றால் முதல்முறையாக சோதனையில் பிடிப்பட்டால் 2000 ரூபாய் அபராதமும் மீண்டும் பிடிபட்டால் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது மூன்று மாத சிறை தண்டனை விதிக்க மோட்டார் வாகன சட்டம் 196 ஆவது பிரிவில் வழி வகுக்கப்பட்டுள்ளது. எனவே வாகனம் வைத்துள்ளவர்கள் அனைவரும் காப்பீடு எடுப்பது அவசியமாகும்.