10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியை த.வெ.க தலைவர் விஜய் இன்று  நடத்தினார்.   இதில் ஏராளமான மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இந்த  கல்வி விருது வழங்கும் விழாவில், பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

விஜய்யை நேரில் பார்த்த மாணவிகள் பலர், மேடையிலேயே தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக, மாணவியின் தாய் ஒருவர், ‘தலைவா’ படத்தில் விஜய் பாடிய ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ பாடலை, புதிய வெர்ஷனில் பாடினார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.