
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சீமான் நேரில் சென்று சந்தித்த விஷயம் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக கூறிய போது சீமான் அவரை சரமாரியாக விமர்சித்தார். ஆனால் திடீரென ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என கூறினார்.
இப்படி ரஜினிகாந்தை விமர்சித்த அவர் திடீரென அவரை சந்தித்தது பேசும் பொருளாக மாறி உள்ளது. இதற்கிடையில் நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சீமான் நேரில் சென்று பார்த்தார் என்று சாட்டை துரைமுருகன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்த நிலையில் அதற்கு முன்னதாக மெண்டல் ரஜினிகாந்த் என்று பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவுகளை நெட்டிசன்கள் வைரலாக்கி பல கேள்விகளை எழுப்புகிறார்கள். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை சாட்டை துரைமுருகன் விமர்சித்து பேசிய ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் ரஜினிகாந்த் வாங்கிற பணம் எல்லாம் கருப்பு பணம் என்றும், அதற்காக அவர் வெள்ளை அறிக்கை தருவாரா என்று =ம் சாட்டை துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
உண்மையில் ரஜினிகாந்த் இந்த நாட்டையும் மக்களையும் நேசிக்கிறார் என்றால் இந்தியா வல்லரசாக விரும்புகிறார் என்றால் நான் வாங்குகிற சம்பளத்திற்கு நேர்மையான முறையில் வரி கட்டுகிறேன் என்று கூறி வெள்ளை அறிக்கை கொடுப்பாரா.? அவரால் அப்படி கொடுக்க முடியாது. மேலும் அவர் கருப்பு பணம் தான் வாங்குகிறார் என்று அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
Rewind 😂 pic.twitter.com/PUMuAdxjfm
— Pokkiri Victor (@PokkiriVictor) November 22, 2024