மயிலாடுதுறை மாவட்டம் மேலப்பாதி மேல தெருவை சேர்ந்தவர் அப்பு(28). இவர் அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை தலைவராக உள்ளார். அந்த பகுதியில் 23 வயது இளம்பெண் ஒருவர் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார்.

கடந்த 20-ஆம் தேதி அப்பு பியூட்டி பார்லருக்கு சென்று நண்பரின் குழந்தைக்கு பிறந்தநாள் மேக்கப் செய்ய வேண்டும் என கூறி அழைத்துள்ளார். இதனை நம்பி அந்த பெண் அவரது இருசக்கர வாகனத்தில் சென்றார்.

இதனையடுத்து செம்பனார்கோவில் ரயிலடி பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருந்த ஒரு வீட்டிற்கு அப்பு இளம்பெண்ணை அழைத்து செல்ல முயன்றார். ஆனால் அங்கு யாரும் இல்லாததால் சந்தேகம் அடைந்த இளம்பெண் வீட்டிற்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார்.

அப்போது அப்பு கத்திய காட்டி மிரட்டி பெண்ணை தரதரவனை இழுத்துச் சென்று அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது. அந்த பெண் அலறி கூச்சலிட்டதும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டனர்.

இதற்கிடையே அப்பு அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்புவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.