
ஜப்பானில் தனிநபர்கள் காதலர் அல்லது காதலி வேடமிட வேறு ஒருவரை பணியமர்த்தும் தனித்துவமான நிகழ்வை நீங்கள் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
இந்த வாடகை உறவுகள் உண்மையான உறவுகளைப் போன்ற உணவருந்துதல், நிகழ்வுகளில் கலந்து கொள்வது அல்லது வெறுமனே ஒருவரையொருவர் மகிழ்விப்பது போன்ற செயல்களை உள்ளடக்குகின்றன. இது ஜப்பானில் ஒரு பரிச்சயமான கருத்து என்றாலும், இந்தியாவில் இது மிகவும் அரிது. ஆனால், இந்திய பெண் ஒருவர் சமீபத்தில் இதேபோன்ற சேவையை பரிந்துரைத்து ஆன்லைனில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இன்ஸ்டாகிராமில், @divya_giri__ என்ற பக்கத்தை நடத்தும் ஒரு பெண் கண்ணாடியில் போஸ் கொடுத்து, “தனியா? டேட்டிற்கு செல்ல விருப்பமா? என்னை டேட்டிற்கு வாடகைக்கு எடுங்கள்!!” என்று எழுதியுள்ளார். மேலும் அவர் பல்வேறு வகையான டேட்களுக்கான விலைகளை விவரித்தார்: ₹1500 க்கு ‘ரிலாக்ஸ்டு காபி டேட்’, ₹2000 க்கு ‘நார்மல் டேட் (இரவு உணவு & திரைப்படம்)’, ₹4000 க்கு ‘பைக் டேட்’, ₹6000 க்கு ‘எங்கள் டேட் பற்றிய பப்ளிக் போஸ்ட்’ மற்றும் மேலும், ₹10,000 வரை செல்கிறது.
“இந்த பெண் ஜப்பானில் இருப்பதாக நினைக்கிறாள்,” என்று ஒரு பயனர் கிண்டல் செய்தார். இதையடுத்து, இந்த இன்ஸ்டாகிராம் ரீல் மற்ற தளங்களிலும் பரவத் தொடங்கியது, பலர் இது ஒரு மோசடி என்று சந்தேகித்தனர். ‘X’ என்ற தளத்தில் ஒரு பயனர், “இவை அனைத்தும் வெறும் மோசடிகள் தான்” என்று எழுதினார். மற்றொருவர், “இது தேன் வலை. எனவே விலகி இருங்கள், நீங்கள் சிக்கினால் லட்சக்கணக்கில் பணம் கேட்கிறார்கள், எனவே எச்சரிக்கையாக இருங்கள்” என்று எச்சரித்தார்.
View this post on Instagram