
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஸ்ரீ தர்ஷன் (22) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் வீடு எடுத்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அங்குள்ள ஒரு தனியார் கல்லுரியில் பிஏ ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்இவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கிய நிலையில் அங்கு கல்லூரி மாணவிகள் உட்பட பல பெண்களை அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட 2 மாணவிகள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது தான் ஸ்ரீ தர்ஷன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் வெளிவந்துள்ளது. அதாவது அவர் மீது 2 மாணவிகள் மற்றும் புகார் கொடுத்த நிலையில் கிட்டத்தட்ட 20 பேரை அவர் காதலிப்பதாக கூறி வாடகை வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களிடம் அத்துமீறியுள்ளார்.
அதன் பிறகு அவர்களை பாலியல் பலாத்காரம் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை செல்போனில் பதிவு செய்து இந்த விஷயத்தை வெளியே சொன்னால் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பலர் அதனை கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டனர். இருப்பினும் தற்போது துணிந்து 2 மாணவிகள் புகார் கொடுத்துள்ளதால் தான் அவரின் லீலைகள் அனைத்தும் அம்பலமாகியுள்ளது. தற்போது ஸ்ரீதர்ஷனை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது இயக்குனர் மோகன் ஜி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் எத்தனை முறை காவல்துறையினர் சொன்னாலும், திரைப்படங்கள் மூலம் சொன்னாலும், செய்தித்தாள்கள் மூலம் நாள்தோறும் செய்தி வெளியானாலும் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவருடைய பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அதற்கு தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்