பிளிப்கார்டு நிறுவனம் வீட்டில் உள்ள உங்கள் பழைய பொருட்களை விற்பதற்கான சூப்பர் ஆஃபரை அறிவித்திருக்கிறது. இதில் உங்களது வீட்டில் உள்ள பழைய எலக்ட்ரானிக் பொருட்களை விற்று (அ) எக்ஸ்சேஞ்ச் செய்து புது பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம். அதன்படி வாடிக்கையாளர்கள் தாங்கள் ஏற்கனவே பயன்படுத்திய மின்னணு சாதனங்களான ஸ்மார்ட் போன்கள், மடிக்கணினிகள், டிவிகள், ஃப்ரிட்ஜ்கள் மற்றும் வாஷிங் மெஷின்கள் ஆகியவற்றை எக்ஸ்சேஞ்ச் செய்துக்கொள்ளலாம். எனினும் செகண்ட் ஹேண்ட் பொருளின் மதிப்பை பிளிப்கார்டு நிறுவனம்தான் முடிவு செய்யும்.

அப்போது நீங்கள் உங்களது பொருளுக்கு கிடைத்திருக்கும் மதிப்பை பொறுத்து கூடுதல் விலை கொடுத்து புது பொருள் ஒன்றை வீட்டிற்கு கொண்டுவரலாம். அதிலும் குறிப்பாக ஸ்மார்ட் போன்களுக்கு பிளிப்கார்டு அதிகமாக எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை கொடுக்கும். தற்போது இத்திட்டத்தில் கூடுதலாக வாஷிங் மெஷின், லேப்டாப், டிவிகளையும் சேர்த்து உள்ளது. ஸ்கிராப் செய்யப்பட்ட பொருட்களையும் நீங்கள் பிளிப்கார்டு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் விற்பனை செய்யலாம். இருப்பினும் உபயோகப்படுத்திய பொருட்களின் மதிப்பு அதன் தற்போதைய நிலை மற்றும் வயதைப் பொறுத்தது.