சென்னை மாவட்டத்தில் உள்ள திநகரில் தனியார் வங்கி அமைந்துள்ளது. இங்கு வங்கி ஊழியர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது வாடிக்கையாளர் போல வந்த ஒரு வாலிபர் திடீரென வங்கி ஊழியரை வெட்டியுள்ளார். இதனால் ஊழியரின் காதில் வெட்டு விழுந்தது.

உடனே அங்கிருந்தவர்கள் வாடிக்கையாளர் போல நுழைந்து வங்கி ஊழியரை வெட்டிய நபரை சுற்றி வளைத்து போலீசில் ஒப்படைத்தனர். காயம் அடைந்த வாlங்கி ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.