வங்காள தேசத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் பல நகரங்களில் வெப்ப அலை வீசுகிறது. இதனால் பகல் நேரங்களில் பெரும்பாலான பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் வெயிலின் தாக்கத்தினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு உறுதி  செய்துள்ளது.

அதன்படி நேற்று முன்தினம் காலை 11 மணி முதல் நேற்று காலை 11 மணி வரையில் மட்டும் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் புவி  வெப்பமடைவதால் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்று வங்கதேசம். அங்கு இனிவரும் ஆண்டுகளில் சீரற்ற மழை மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக கடும் வெப்ப அலை வீசும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.