![](https://www.seithisolai.com/wp-content/uploads/2023/06/22-62fc8a522259c.jpg)
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி விரைவில் whatsapp புதிய அப்டேட் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் மூலமாக தவறவிட்ட அழைப்புகளுக்கான புதிய கால் பேக் சேவை வாட்ஸ் அப்பில் தொடங்கப்பட உள்ளது. இந்த அம்சம் விண்டோஸ் தளத்தில் கிடைக்கும். இந்த அப்டேட் வாட்ஸ் அப்பில் மிஸ்டுகால்களை கண்டறிவதை எளிதாக்கும். அந்த எண்களை சுலபமாக திரும்ப அழைக்கலாம். இந்த சேவையை பயன்படுத்த ப்ளே ஸ்டோருக்கு சென்று வாட்ஸ் அப்பின் சமீபத்திய பீட்டா பதிவை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.