
இந்தியாவில் வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பயனர்களுக்காக கூடுதல் பாதுகாப்பை வழங்கி வருகிறது. அதனால் கோடிக்கணக்கான பயனர்கள் இந்த செயலை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் புதிய தொலைதொடர்பு மசோதா மூலம் மூன்று முக்கிய சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்த புதிய சட்ட மசோதாவின் ஒப்புதலுக்காக மத்திய அரசு காத்திருக்கும் நிலையில் இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினால் whatsapp மற்றும் telegram போன்ற செயலியில் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட மெசேஜ்களை விசாரணைக்கு பயன்படுத்த அனுமதி கிடைக்கும் . இதனால் பயனர்களின் பாதுகாப்பு அம்சங்கள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.