இன்றைய காலகட்டத்தில் அனைத்து சேவைகளும் எளிதில் இருந்த இடத்தில் இருந்து கொண்டே கிடைக்கின்றன. அந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அதனைப் போலவே தற்போது சமையல் எரிவாயு சிலிண்டரை இனி இருந்த இடத்தில் இருந்து கொண்டே புக் செய்து கொள்ளலாம்.

வாட்ஸ் அப் மூலமாக ஒரு செய்தியை அனுப்புவதன் மூலம் சமையல் எரிவாயு இணைப்பு வைத்துள்ள பயனர்கள் முன்பதிவு, நிரப்புதல் மற்றும் பிற சேவைகளை நொடிப்பொழுதில் முடித்து விடலாம். நீங்கள் ஒரு புதிய இணைப்பு பெற விரும்பினால், சிலிண்டரை நிரப்ப விரும்பினால், ஒரு செய்தியை அனுப்பவும், எரிவாயு சிலிண்டர் உங்கள் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும். இதற்காக எரிவாயு நிறுவனங்களில் பிரதிநிதிகள் பல்வேறு வாட்ஸ்அப் எண்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.ஹெச்பி சேவைகள் 92222 01122, இண்டேன் 75888 88824 மற்றும் பாரத் கேஸ் 18002 24344 என்ற எண்ணில் செய்தி அனுப்பவும்.