உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஒரு புதிய அம்சம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய அம்சம் எதிர்கால புதுப்பிப்பீல் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்ட வாட்ஸ் அப் கொள்கைகளை மீறினால் பயனர்களுடன் சேட் செய்வதை தற்காலிகமாக தடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

அதாவது குறிப்பிட்ட வாட்ஸ் அப் கொள்கைகளை மீறும் பயனர்களுக்கு தற்காலிக தடையை விதிக்கப்படும். அப்போது குறிப்பிட்ட காலத்திற்கு பயனர்கள் புதிய சேட்டை தொடங்க முடியாது. இருந்தாலும் தற்போது உள்ள chat மற்றும் குழுக்களுக்குள் செய்தியை பெறுவதற்கும் பதிலளிப்பதற்கும் பயனர்களுக்கு எந்த ஒரு தடையும் இருக்காது. அதாவது மோசடி, மொத்தமாக செய்தி அனுப்புதல் மற்றும் பல்வேறு வகையான துஷ் பிரயோகங்களை கண்டறிய வாட்ஸ் அப் தானியங்கு கருவிகளை பயன்படுத்துகின்றது.

நிரந்தர தடைகள் மீதான தற்காலிக கட்டுப்பாடுகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் பயனர்கள் தங்கள் தரவுகளுக்கான அணுக்களை முழுவதுமாக இழக்காமல் அவர்களின் நடத்தையை சரி செய்வதற்கான வாய்ப்பை whatsapp வழங்கும். கணக்கு கட்டுப்பாடு அம்சம் தற்போது உருவாக்கத்தில் உள்ள நிலையில் இது செயலியின் எதிர்கால புதுப்பிப்பின் சேர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.