
வாட்ஸ் அப் நிறுவனமானது அவ்வப்போது புது புது அப்டேட்டுகளை பயனர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் தற்போது AI தொழில்நுட்ப பயன்பாட்டை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. வாட்ஸ்-அப் உள்ளிட்ட மெட்டா செயலிகளை திறந்ததுமே, திரையில் ஒரு வட்ட வடிவ புதிய ஐகான் இருக்கும். அதனை தொட்டு உள்ளே நுழைவதன் மூலமாக இந்த ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும்.
கணித சிக்கலுக்கான ஆலோசனைகளை வழங்குவதற்கும் மின்னஞ்சலை மிகவும் தொழில்முறையாக உருவாக்குவதற்கும் இந்த AI பயன்படுகிறது. மேலும் நமக்கே தெரியாத மற்றும் தெரிந்து கொள்ள விரும்பும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் இந்த AI பதிலளிக்கும்.