அரியானா மாநிலத்தில் இந்திய விமானப்படையின் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் பிழைத்தார். அதாவது அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து ஜாகுவார் ஏர்கிராஃப்ட் போர் விமானம் பயிற்சிக்காக புறப்பட்டது. இந்த விமானம்  பார்ட்வாலா கிராமத்திற்கு மேலே பறந்த போது திடீரென விபத்தில் சிக்கியது.

உடனடியாக விமானி பாராசூட் மூலம் கீழே குதித்தார். அந்த விமானம் கீழே விழுந்ததில் தீப்பிடித்து எரிந்து சேதமானது. அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பிய நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.