குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரேலி மாவட்டத்தில் ஒரு தனியார் விமான பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் நேற்று விமானி ஒருவர் விமானத்தில் பயிற்சி மேற்கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் விமானம் கீழே இருந்த ஒரு மரத்தின் மீது மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. ஒரு குடியிருப்பு பகுதிக்குள் இந்த விமானம் விழுந்து நொறுங்கிய நிலையில் விமானி பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகளும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது