மாணவர்களுக்கு இரு மொழி கொள்கை போதுமானது என பொன்முடி கூறியதற்கு சரமாரியான கேள்விகளை பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா எழுப்பியுள்ளார் இது குறித்து பேசிய அவர்,
நான் கேட்கிறேன், பொன்மொழிக்கு முதுகெலும்பு இருந்தால் சமஸ்கிருத ஹிந்திய சொல்லிக் கொடுக்கிற வேளச்சேரியில் இருக்கக்கூடிய சன் ஷைன்ஸ் ஸ்கூல இழுத்து மூடுங்க.

உங்கள் தலைவர் கருணாநிதி கொண்டு வந்தது தானே சமச்சீர் கல்வி. ஸ்டாலின் மகள் பள்ளிக்கூடத்தில் சமச்சீர் கல்வி கொடுக்க மாட்டீங்களா ? அப்ப நீங்களே கருணாநிதி அவர்களை மதிக்கல. ஆகவே உங்களை போல வேஷதாரிகள் மொழிக் கொள்கையில் இதுபோல் பிடிவாதம் பிடித்தால் , திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தலைவர்கள் டி ஆர் பாலு குடும்பம் , ஆற்காடு வீராசாமி குடும்பம் , துரைமுருகன் குடும்பம் நடத்துகிற எல்லா சிபிஎஸ்இ பள்ளிக்கூடம் வாசலில் நின்று போராட்டம் நடத்தணும்.

அதை முதலில் சமச்சீர் கல்வியா மாற்றங்கள் இல்லையா வாய மூடிக்கிட்டு இருங்க. மாணவர்கள் எத்தனை மொழி வேணாலும் படிக்கட்டும். ஹூ ஆர் யூ ஒரு மொழி படிக்கக் கூடாது என்று தடுப்பதும் தவறுதான். அதனால் தான் சொல்கிறேன் நீங்கள் கறை படிந்த கைகள் 294 காலேஜில் ஆதார் கார்டை டூப்ளிகேட் செய்து ஆசிரியர் சேர்த்திங்க அதை கவனிக்க திறமையற்ற மாணவர்களோடு நடனமாடுகிறார். இவர் என்ன மாதிரியான நபர் மொழிய பத்தி எல்லாம் பேசக்கூடாது என்று கடுமையாக எச் ராஜா சாடியுள்ளார்.