
முன்னணி ஐடி ஜாம்பவான்கள் ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு வர வேண்டும் என்று உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். சமீபத்தில், கூகுள் தனது ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தியை அனுப்பியுள்ளது. வாரத்தில் குறைந்தது 3 நாட்களாவது ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதியை மீறுபவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும், என்று கூறப்பட்டுள்ளது.
ஊழியர்களின் செயல்திறன் மதிப்பாய்வுகளில் குறைந்த தரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. நிறுவனம் பணி கொள்கையை புதுப்பித்து வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் இருந்து WFH மிகப்பிரபலமானது.