
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் மற்றும் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை புரிந்து வருகிறது. அதன் பிறகு வாரிசு படம் ரிலீஸ் ஆன 5 நாட்களில் உலக அளவில் ரூ. 150 கோடியும், 7 நாட்களில் ரூ. 210 கோடியும் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் பிறகு தமிழகத்தில் மட்டும் வாரிசு திரைப்படம் 150 கோடி வசூலை நெருங்கி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் துணிவு திரைப்படத்தின் வசூல் விபரத்தை போனி கபூர் வெளியிடாததால் அஜித் ரசிகர்கள் துணிவு படத்தின் வசூல் என்ன என்று கேட்டு வருகிறார்கள்.
ஆனால் திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் வாரிசு திரைப்படம் 210 கோடி வசூல் செய்ய வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார். இந்நிலையில் துணிவு படத்தின் விநியோகஸ்தர்களில் ஒருவரும் தயாரிப்பாளர் போனி கபூருக்கு நெருக்கமானவருமான ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளிப்படையான பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்காக நானும் காத்துக் கொண்டிருக்கிறேன். அதுவரை ரசிகர்கள் பொறுமையாக காத்திருங்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் வாரிசு திரைப்படம் 210 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் கண்டிப்பாக அவ்வளவு ரூபாய் வசூலிக்க வாய்ப்பே இல்லை என்று கூறுவதால் நெட்டிசன்கள் பலரும் உங்க இஷ்டத்துக்கு என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள் என்று கலாய்த்து வருகிறார்கள்.
With regards to trackers and reviewers, I too hopefully wait for a transparent box office tracking system like foreign countries. Until then let us all enjoy cinema in its purest form rather fighting for box office records .Thanks all for making both films successful.
— raahul (@mynameisraahul) January 19, 2023