
ஷிவா நிர்வாணா டைரக்டில் விஜய் தேவரகொண்டா இப்போது “குஷி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமந்தா கதாநாயகியாக நடிக்கக்கூடிய இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதையடுத்து விஜய் தேவரகொண்டாவின் 13வது படத்தை கீதா கோவிந்தம் படத்தை இயக்கிய பரசுராம் இயக்கவுள்ளார். இப்படத்தில் நாயகியாக மிருணாள் தாக்கூர் இணைந்துள்ளார்.
“விடி 13” என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை தளபதி விஜய்யின் “வாரிசு” திரைப்படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் புது அப்டேட் வெளியாகி உள்ளது. அந்த வகையில் “விடி 13” திரைப்படத்தின் சூட்டிங் இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை படக்குழு சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.
The much awaited collaboration of THE #VijayDeverakonda, @parasurampetla, & @svc_official’s #VD13 is officially launched today.
The talented @mrunal0801 joins the stellar cast.
Shoot begins soon.#SVC54@Thedeverakonda#KUMohanan @GopiSundarOffl #VasuVarma #DilRaju #Shirish pic.twitter.com/ZzOfigIvme
— Sri Venkateswara Creations (@SVC_official) June 14, 2023