அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் கடந்த 11 ஆம் தேதி வெளியாகி வசூல் ரீதியாக சக்கைபோடு போட்டு வருகிறது. இரண்டு படங்களுக்கும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.  வாரிசு, துணிவு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. இந்நிலையில் வாரிசு திரைப்படம் வெளியான 7 நாட்களில் உலக அளவில் ரூ.210 கோடியை வசூல் சாதனை படைத்துள்ளதாக தமிழக விநியோகஸ்தர் லலித் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்கு திருப்பூர் சுப்பிரமணியம் 200% வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து திருப்பூர் சுப்பிரமணியம் கூறுகையில், லலித் வாங்கியது தமிழ்நாடு உரிமை மட்டுமே. அதிலும் 5 முக்கிய ஏரியாக்களை ரெட் ஜெயண்டிடம் கொடுத்துவிட்டார். வெளிநாட்டு உரிமையை வேறு ஒருவர் வாங்கிவிட்டார். அப்படி இருக்க 7 நாட்களில் எப்படி இவ்வளவு வசூல் என தெரிய வந்தது? என கேட்டுள்ளார்.