
சென்னை மாவட்டம் வெங்கட்ராஜகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் கூலி வேலை பார்க்கிறார். இவரது மகள் அனிதா(15) அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அனிதா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து விளையாட சென்று விட்டு வீட்டிற்கு வந்த அனிதாவின் தம்பி தனது அக்கா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனிதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. அனிதா வேறொரு சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அனிதாவுக்கு திருமணம் செய்ய முடிவு எடுத்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் அனிதா தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.