வாழையின் அனைத்து பகுதிகளுமே ஆரோக்கியத்தை கொடுக்கும் நிலையில் வாழை இலையில் சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம். தமிழர்களின் அனைத்து பாரம்பரிய விழாக்களிலும் உணவு பரிமாற வாழை இலை தான் பயன்படுத்தப்படுகிறது.  வாழை இலையில் மேலே உள்ள பச்சைத் தன்மை உணவை எளிதில் ஜீரணம் அடைவதுடன் நன்கு பசியை தூண்டவும் நோயில்லாமல் வாழவும் வைக்கிறது.

ஆரோக்கியமான உணவுகளை வாழை இலையில் சாப்பிட்டு வந்தால் நீண்ட ஆயுளுடன் வாழ முடியும். தோல் சம்பந்தமான வியாதிகள் வராமல் தடுக்கிறது. சிறுநீரக கற்கள் உருவாவதை தடுப்பதுடன் சிறுநீர் பை தொடர்பான நோய்களுக்கு தீர்வாக அமைகிறது. எளிதில் செரிமானமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது.