
கர்நாடக மாநிலத்தில் அனுஷா (19) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த வேணு (21) என்ற வாலிபருடன் பழகி வந்த நிலையில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு அனுஷாவை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால் திருமணத்திற்கு பிறகும் தன் காதலை மறக்க முடியாமல் அனுஷா தவித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆடி மாதம் பிறக்க இருப்பதால் அனுஷா தன் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது தன் காதலனிடம் தான் தற்கொலை செய்ய இருப்பதாக கூறியுள்ளார். இதற்கு அந்த வாலிபரும் சம்மதம் தெரிவித்தார். அதன் பிறகு இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் சடலத்தையும் மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் வாழ்க்கையில் ஒன்று சேர முடியவில்லை என்பதால் இப்படி ஒரு விபரீத முடிவை இருவரும் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.