
2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு வெற்றிக்கான வியூகத்தை வகுக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வுக் கூட்டத்தை நடத்துமாறு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்ட நிலையில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொருவரும் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதாவது கே பி முனுசாமி 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல் என்பது வாழ்வா சாவா தேர்தல் என்று கூறினார்.
அதன் பிறகு இந்த தேர்தலில் நாம் தோல்வி அடைந்தால் சிறிய கட்சிகள் எல்லாம் மேலே ஏறி வந்து விடும் என்றார். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் தங்கமணி 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கும் என்றார். அதாவது அவர் பேசும்போது நிர்வாகிகள் பேசிக் கொண்டிருந்ததால் வேதனை அடைந்தார். பின்னர் அதிமுக நிர்வாகிகளிடம் ஒற்றுமை இல்லை எனவும் இப்படி நீங்கள் ஒற்றுமை இல்லாமல் பிரிந்து செயல்பட்டால் 2026 தேர்தலில் அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கும் என்றார்.
எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்குவது மட்டும் தான் நம்முடைய நோக்கம். அனைவரது உடம்பிலும் அதிமுகவின் ரத்தம் ஓடுவதால் இனியாவது அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலுக்கு வெற்றி பெற உழைக்க வேண்டும் என்று கூறினார். அதன்பிறகு திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் திருச்சியில் கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர் கட்சிப் பணிகளை செய்வதற்கு கூட நிர்வாகிகள் பணம் கேட்பதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அதன் பிறகு கூட்டணிக்கு வருபவர்கள் சும்மா வருவது கிடையாது. 20 சீட் கொடு. 100 கோடி பணம் கொடு என்றெல்லாம் கேட்கிறார்கள் என்று கூறினார். மேலும் கள ஆய்வு என்பது நிர்வாகிகளை உற்சாகப்படுத்துவதற்கு என்பதால் இனியாவது பணிகளை மேற்கொண்டு வெற்றிக்கான வியூகத்தை வகுக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளதால் தோல்வி பயம் வந்துவிட்டதா என்று ஒரு சிலர் கேள்வி எழுப்பும் நிலையில் கண்டிப்பாக அந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் இருப்பதால் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அரசியல் களம் சூடு பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.