திருப்பத்தூர் டவுன் பகுதி சேர்ந்தவர் ஆரோக்யராஜ்(63). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 202 2-ஆம் ஆண்டு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை ஆரோக்கியராஜ் பிஸ்கட் தருவதாக கூறி வீட்டிற்குள் அழைத்து சென்றார். அதன் பிறகு 5 வயது சிறுமிக்கு ஆரோக்கியராஜ் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறி கதறி அழுதார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஆரோக்யராஜை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் ஆரோக்யராஜுக்கு 6 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.