
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை பகுதியில் ஜெபராஜ் (39) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநர். இவர் தினசரி தன்னுடைய ஆட்டோவில் பள்ளிக்கு மாணவ மாணவிகளை அழைத்து செல்வது வழக்கம். அந்த வகையில் 7-ம் வகுப்பு மாணவி ஒருவரும் ஆட்டோவில் சென்று வந்துள்ளார். இந்த மாணவியை சம்பவ நாளில் ஸ்கூலுக்கு கொண்டு போய் விடுவதாக கூறி ஆட்டோவில் ஜெபராஜ் ஏற்றிவிட்டு சென்றார். ஆனால் அவர் ஸ்கூலுக்கு அழைத்துச் செல்லாமல் ஏதோ சில காரணங்களை கூறி தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த மாணவி பயத்தில் கத்தி கூச்சலிட்டுள்ளார்.
அந்த மாணவி சத்தம் போட்டு அழுததால் பின்னர் பயந்து போன அவர் அந்த மாணவியை மிரட்டி இது பற்றி வெளியே சொல்ல கூடாது என்று கூறி ஸ்கூலுக்கு கொண்டு போய் விட்டுள்ளார். அந்த மாணவி ஸ்கூலுக்கு லேட் ஆக வந்த நிலையில் அழுது கொண்டே இருந்ததால் ஆசிரியர்கள் விசாரிக்க உண்மை வெளிவந்தது. பின்னர் அந்த மாணவியின் பெற்றோரை ஆசிரியர்கள் ஸ்கூலுக்கு வரவழைத்து நடந்த விவரத்தை கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஆட்டோ ஓட்டுனர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.