
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருவதோடு தற்போது வாத்தி என்ற திரைப்படத்தின் மூலம் டோலிவுட்டிலும் அறிமுகமாக இருக்கிறார். இந்த படம் பிப்ரவரி 17-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் நிலையில் நேற்று வாத்தி படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் வாத்தி திரைப்படத்தின் தெலுங்கு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் மற்றும் படக்குழு கலந்து கொண்ட நிலையில் அது தொடர்பான வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது நடிகர் தனுஷ் வா வாத்தி என்ற பாடலை தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பாடி அசத்தியுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் அதிக அளவில் வைரலாக்கி வருகிறார்கள்.
#Dhanush sings #VaaVaathi Tamil and Telugu version ❣️🎶https://t.co/CRO0e2ataJ
— AmuthaBharathi (@CinemaWithAB) February 8, 2023