
விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பதிவான வாக்குகள் இன்னும் சற்று நேரத்தில் எண்ண பட உள்ளன. இதனை முன்னிட்டு அந்த தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முகவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி மரணம் அடைந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது குறிப்பிடத்தக்கது.