
கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடல் நலக்குறைவால் திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி காலமானார். அவர் மறைவைத் தொடர்ந்து காலியானதாக அறிவிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு வரும் ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத் தேர்தல் அட்டவணை:
1, வேட்புமனுத் தாக்கல் துவக்கம் 14.06.2024
2, வேட்புமனுத் தாக்கல் இறுதி நாள் 21.06.2024
3, வேட்புமனு பரிசீலனை 24.06.2024
4, வேட்புமனு வாபஸ் 26.06.2024
5, வாக்குப்பதிவு நாள் 10.07.2024
6, வாக்கு எண்ணிக்கை 13.07.2024