
நடிகர் விஜயகாந்தை சந்திக்க மறுப்பது குறித்து விஜயகாந்தின் நண்பரும் நடிகருமான வாகை சந்திரசேகர் மனம் திறந்து உள்ளார். அந்த காலத்தில் விஜயகாந்த் உடம்பு தேக்கு போல இருக்கும். ஆயிரம் பேர் வந்தாலும் எதிர்க்கும் துணிவு கொண்ட மனிதன் ஒரு இரும்பு மனிதனாக நான் பார்த்த விஜயகாந்த இப்போது பார்க்க கஷ்டமாக இருக்கிறது. அவரை நேரில் பார்த்தால் நான் அழுது விடுவேன்.
என் மகள் திருமணத்திற்கு கூட அவரை அழைக்க வேண்டும் என்று ஆசை தான் ஆனால் இப்போது இருக்கும நிலையை பார்த்து தவிர்த்துவிட்டேன். விஜயகாந்தின் இந்த நிலையை கண்டு மிகவும் வருத்தம் அளிக்கிறது இதனால்தான் நான் அவரை சந்திக்கவில்லை என்று மனம் வருந்தி பேசியுள்ளார்.