விருதுநகரில் விஜய பிரபாகரனை திட்டமிட்ட சூழ்ச்சியால் வீழ்த்தியுள்ளனர் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா குற்றம்சாட்டியுள்ளார். மதிய உணவு இடைவேளைக்குப் பின் 2 மணி நேரம் வாக்கு எண்ணிக்கையை ஆட்சியர் நிறுத்தியதாகக் கூறிய அவர், மறு வாக்கு எண்ணிக்கை கோரியதை தேர்தல் அதிகாரிகள் ஏற்கவில்லை என்று சாடினார். அத்துடன், ஆட்சியருக்கு அழுத்தம் கொடுத்தது யார் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “விருதுநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்தில் தேமுதிக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். 13ஆவது சுற்றுக்குப் பின் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. ஆட்சியரே வந்து வாக்கு எண்ணிக்கையை நிறுத்தத் சொல்லி இருக்கிறார். அங்கு நடந்த குளறுபடிகள் குறித்து புகார் அளித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.