நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் விஜயலட்சுமி தொடர்ந்த பாலியல் வழக்கு பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, விஜயலட்சுமி ஒரு பாலியல் தொழிலாளி. தமிழகத்தில் தினசரி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. இதற்கு கனிமொழி என்ன பதில் சொன்னார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கனிமொழி என்ன பதில் சொன்னார். என்னை நீங்கள் பாலியல் குற்றவாளி என்று எப்படி கூறலாம். என் மீது புகார் கொடுத்துள்ள விஜயலட்சுமி ஒரு பாலியல் தொழிலாளி என்பதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது.

என்ஜாய்மென்ட் வித் அவுட் ரெஸ்பான்சிபிலிட்டி என்று உங்கள் தலைவர் பெரியாரே கூறியுள்ளார். அதைத்தான் நானும் செய்துள்ளேன். அப்படி பார்த்தால் உங்கள் தலைவர் வழியில் தான் நானும் நடந்துள்ளேன். இது எப்படி குற்றமாகும். இதற்கு திமுக மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக விஜயலட்சுமி தன்னுடன் விருப்பப்பட்டு தான் உறவு வைத்ததாகவும் அவருக்கு மாதம் 50 ஆயிரம் கொடுத்ததையும் சீமான் ஒப்புக்கொண்ட நிலையில் தற்போது பெரியார் சொன்னபடி தான் விஜயலட்சுமியுடன் பழகியதாக சீமான் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கனிமொழி பெண்களை அவமானப்படுத்தும் சீமானை சகித்துக் கொண்டு எப்படி அவருடைய கட்சியில் இருக்கிறீர்கள். சீமானின் பேச்சுகளுக்கு அவர் கட்சியில் இருக்கும் பெண்களும் வீட்டில் இருக்கும் பெண்களும் தான் பதிலடி கொடுக்க வேண்டும் என்று கனிமொழி கூறியிருந்த நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீமானை இப்படி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகதாகும்.