மத்திய இணை மந்திரி எல்.முருகன் திருப்பூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, தமிழகத்தில் உள்ள கிராமங்கள் நகரங்கள் என ஒவ்வொரு தெரு முனையிலும் விநாயகரை வைத்து வழிபடுகிறோம். தமிழகம் ஆன்மீக பூமி. இங்கு போலி திராவிடத்திற்கு இடம் கிடையாது என கூறினார்.

அது மட்டும் இல்லாமல் பிரபல நடிகரான விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியிருக்கிறார். இது ஜனநாயக நாடு என்பதால் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். பாஜக விஜயின் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி வைக்குமா என்பதை கட்சி தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் என எல்.முருகன் கூறியுள்ளார். சமீபத்தில் தான் தமிழக வெற்றி கழகத்தின் கொடியும், கொடி பாடலும் அறிமுகமானது குறிப்பிடத்தக்கதாகும்.