தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவருக்கு கலைத்துறையில் சிறந்த சேவை ஆற்றியதற்காக பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நடிகர் அஜித் தற்போது கார் ரேசிலும் கலந்து கொண்டு வருகிறார். நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுக்கு தகுதியானவர் என்றாலும் இவ்வளவு விரைவாக அவருக்கு விருது வழங்கப்பட காரணம் என்ன என்று தற்போது சமூக வலைதளத்தில் விவாதங்கள் எழுந்துள்ளது. அதாவது நடிகர் அஜித்துக்கு இணையாக விஜய்க்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

நடிகர் விஜய் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ள நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை தொடங்கியுள்ளார். நடிகர் விஜயின் அரசியல் பயணம் என்பது கண்டிப்பாக திராவிட கட்சிகள் உட்பட தமிழக அரசியல் கட்சிகளுக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் அஜித் கார் ரேஸில் கலந்து கொண்டுள்ள நிலையில் அவர் தமிழக அரசின் லோகோவை தன் காரில் காட்சிப்படுத்தினார்.

இதன் காரணமாக கார் ரேஸில் வெற்றி பெற்ற அஜித்குமாருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். தற்போது நடிகர் அஜித்துக்கு பத்மபூஷன் விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக விஜய்க்கு எதிராக அஜித்தை வைத்து பாஜக மற்றும் திமுக அரசியல் செய்வதாக கூறப்படுகிறது. இந்த விருது பின்னணியில் கூட பாஜகவின் அரசியல் இருக்கலாம் எனப்படுகிறது.

இவ்வளவு ஆண்டுகாலம் பல வெற்றி தோல்வி படங்களை கொடுத்த  அஜித்துக்கு பத்ம விருது அறிவிக்காமல் தற்போது அறிவித்துள்ளது பேசும் பொருளாக மாறியுள்ளது. அதே சமயத்தில் விஜய்க்கு கூட விருது அறிவித்திருக்கலாம் என்று அவருடைய ரசிகர்கள் கூறுகிறார்கள். மேலும் விஜய்க்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு அஜித்துக்கு பத்மபூஷன் விருதை அறிவித்துள்ளதாக சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.