தமிழக பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக அரசியலை எதிர்மறை அரசியலாக முதல்வர் ஸ்டாலின் எடுத்து செல்கிறார். பிரதமர் வந்திருந்த போது கண்டிப்பாக அந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்து கொண்டிருக்க வேண்டும். வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு தற்போது இஸ்லாமிய பெண்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். இதற்கு நடிகர் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார். விஜயின் அறிக்கைகள் என்பது ஒரு புள்ளிவிவரம் இல்லாமல் பொத்தம் பொதுவாக உள்ளது.

விஜயின் படத்திற்கு டிக்கெட் எவ்வளவு அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கில் விற்கப்படும் அந்த விலையை விஜையால் கட்டுப்படுத்த முடியுமா. பாமர மக்களும் சினிமா பார்க்க வரும் நிலையில் அந்த டிக்கெட்டை அவர்களால் குறைந்த விலைக்கு அல்லது இலவசமாக கொடுக்க முடியுமா.? விஜய்க்கு சினிமாவில் நடிக்க தெரியும், வசனம் பேச தெரியும், டான்ஸ் ஆட தெரியும், ஏமாற்ற தெரியும். ஆனால் அரசியல் பற்றி மட்டும் ஒன்றுமே தெரியாது என்று கூறினார். மேலும் விஜய் ஒன்றுமே தெரியாமல் பேச வேண்டாம் என்று அவர் கூறினார்.