தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் அரசியல் வருகையால் எந்த மாற்றமும் ‌நிகழப் போவதில்லை என்று கூறியுள்ளார். அதன்பிறகு விஜய் ஆட்சியில் பங்கு என்று அறிவித்ததால் இந்தியா கூட்டணியில் எந்த விரிசலும் எழாது என்று தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது என்றும் மக்கள் தரும் ஆதரவை பொருத்து 2026 தேர்தலில் அதிகார பகிர்வு குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.

அதன்பிறகு விஜய்க்கு மட்டுமா கூட்டம் கூடியது ராகுல் காந்தி வந்தபோது கூட அதிக கூட்டம் கூடியது. விஜயின் வருகை என்பது தங்களுடைய கூட்டணியின் வெற்றிக்கு உறுதியாக மட்டுமே இருக்கும் என்று கூறினார். மேலும் முன்னதாக நடிகர் விஜய் திமுக அரசை அரசியல் எதிரி என்ற கூரிய நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கூறினார். இதன் மூலம் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தற்போதே கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.