
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் டிராகன். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் உட்சபட்ச நடிகராக மாறிவிட்டார். இவர் நடித்த முதல் படமே 100 கோடி வசூலித்தது. இதன் காரணமாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பான ஒரு ஹீரோவாகவும் மாறி உள்ளார்.
இந்த சமயத்தில் தான் அஸ்வத் மாரிமுத்து படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த படம் தான் டிராகன். இந்த படம் ரிலீஸ் ஆகி தற்போது நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அஸ்வத் மாரிமுத்து கில்லி படம் குறித்து பேசியுள்ளார். அதாவது விஜய்யின் கில்லி படம் அவருக்கு ரொம்ப பிடிக்குமாம். அந்த படத்தை ரீமேக் செய்ய விரும்புகிறாராம். அப்படி கில்லி படத்தை ரீமேக் செய்தால் அதில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க வைப்பதாக கூறியுள்ளார் .