தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராக பிரபலமான விஜய் ஆண்டனி நான் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே விஜய் ஆண்டனி ககன மார்கன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனியின் 25வது படத்தை இயக்குனர் அருண் பிரபு இயக்க இருக்கிறார். இந்நிலையில் இந்த 25 வது படத்தின் டைட்டில் இன்று காலை 11 மணியளவில் வெளியாகும் என்ற பாடக்குழு அறிவித்துள்ளது.