திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். இவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக வெற்றி கழகம் இதுவரை களத்தில் இறங்கவில்லை. எனவே விஜய் பற்றி கருத்து கூற எதுவும் கிடையாது. விஜய் இன்னும் தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்கவில்லை.

அவரைப் பற்றி கருத்து சொல்வதற்கு செய்திகள் கிடையாது. விஜய் தேர்தலை சந்தித்திருந்தால் அவரைப் பற்றி கருத்து சொல்லலாம். விஜய் வெற்றி பெறலாம் வெற்றி பெறாமல் போகலாம். அவருடன் அதிமுக கூட்டணி வைக்கலாம் கூட்டணி வைக்காமலும் போகலாம். அவரைப் பற்றி கருத்து சொல்ல எந்த அபிப்பிராயமும் ‌ கிடையாது. மேலும் கூட்டணி அமைப்பு தொடர்பாக தேர்தல் சமயத்தில் தான் முடிவு செய்ய முடியும் என்று கூறினார்.