தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை தொடங்கியுள்ள நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை தர்ஷா குப்தாவிடம் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை தொடங்கிய விஜய்க்கு பயங்கர வரவேற்பு இருக்கிறது.

அவர் முதலமைச்சர் ஆனால் என்ன செய்வார் என்பதை பார்க்க நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறினார். அதன் பிறகு உங்களுக்கு எம்எல்ஏ சீட் கொடுத்தால் நீங்கள் விஜய் கட்சியில் இணைவீர்களா என்று நிருபர் ஒருவர் கேட்டார். அதற்கு அவர் விஜய் கூப்பிட்டாலே போதும் நான் உடனே ஓடி விடுவேன் என்று கூறினார். மேலும் அதே சமயத்தில் விஜய் தனக்கு எம்எல்ஏ சீட் தருகிறேன் என்று கூறி கட்சிக்கு அழைப்பதற்கெல்லாம் வாய்ப்பு கிடையாது என்றும் கூறினார்.