
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். முன்னதாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறிய போது ரஜினியை மிகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்த சீமான் திடீரென போயஸ் கார்டனில் உள்ள ரஜினி இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. அதாவது நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த நிலையில் முதலில் அவருக்கு ஆதரவு கொடுத்த சீமான் பின்னர் அவரை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார். இந்நிலையில் விஜய் கட்சி ஆரம்பித்ததால் தற்போது நாம் தமிழர் கட்சியிலிருந்து பலர் விலகி விஜய் கட்சியில் இணைந்து வருவதாகவும் கிட்டத்தட்ட பல வருடங்களாக தான் சேர்த்து வைத்த மரியாதை எல்லாம் விஜயால் காலியாக விடும் என்ற பயத்தால்தான் சீமான் ரஜினிகாந்தை சந்தித்ததாக தற்போது ரஜினியின் ஆதரவாளர் ஒருவர் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்.
அதாவது ரஜினியை சந்தித்த சீமான் அவருடைய காலில் விழுந்து விஜயை எனக்கு ஆதரவாக செல்ல சொல்லுங்கள் இல்லையெனில் என்னுடன் கூட்டணி அமைக்க சொல்லுங்கள் என்று கூறியுள்ளாராம். விஜய் என்னை கவனிக்காமல் அரசியல் செய்வதால் என்னுடைய அதிகாரம் மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றை இழக்க செய்வதாக இருப்பதாக சீமான் கூறியுள்ளார். விஜய்யிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள் என்று கூறி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலில் சீமான் விழுந்துள்ளார். அவர் ரஜினியை பேசிய பேச்சுக்கு போயஸ் கார்டன் பக்கம் கூட அவரை விடக்கூடாது. ஆனால் மானங்கெட்டு போய் சீமான் ரஜினியின் காலில் விழுந்தார். கடந்த 15 வருட காலத்தில் நான் சேர்த்து வைத்திருந்த எல்லா கூட்டத்தையும் விஜய் தன் பக்கம் இழுத்துக் கொள்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை எதிர்த்தவர்கள் எல்லோரும் அவரின் காலில் விழுந்தது தான் வரலாறு. இதில் சீமான் விதிவிலக்கு கிடையாது என்று அவர் கூறியுள்ளார். மேலும் அவர் மானங்கெட்டு போய் சீமான் ரஜினியின் காலில் விழுந்து விஜயிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள் என்று கெஞ்சியதாக அவர் கூறியது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினி காலுல விழுந்து கெஞ்சிட்டு வந்தாரு சீமான்!
என்ன சொல்ல இந்த #NTK தம்பிகளை!#TVK #TVKVIJAY #vijay #Thalapathy69 pic.twitter.com/DqvNp7TKtU
— தமிழச்சி TVK (@tvkvijay_4tn) November 25, 2024