விஜயின் குரலில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஆடியோ போலியானது என்று விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான ஆடியோவில், தமிழ்நாட்டு விவசாயிகளை அழிக்க நினைக்கும் கர்நாடகாவில் இப்போது நடந்து கொண்டிருக்கும் காவிரி பிரச்சனை காரணமாகவும் நடிகர் சித்தார்த்தை தாக்கிய அமைப்பினருக்கு கடிதம் தெரிவிக்கும் வகையிலும் எனது லியோ படத்தை நான் கர்நாடகாவில் திரையிட போவதில்லை என்ற ஆடியோ இணையத்தில் பரவி வந்தது. இந்த நிலையில் விஜய் பேசுவதாக பரவும் வீடியோ போலியானது என்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தற்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.