
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் நடிகர் விஜய் திமுகவை நேரடியாக அரசியல் எதிரி என்று அறிவித்தார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார் மாநாட்டில் விஜய் கேட்ட கேள்விகள் அனைத்தும் மிகச் சரியானவை என்று கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, மத்திய அரசு பாசிசத்தை நோக்கி செல்கிறது. அப்படி எனில் மாநில அரசு எதை நோக்கி செல்கிறது.
அது பாசிசம் என்றால் இது என்ன பாயாசமா என விஜய் கேட்ட கேள்வி சரியானது. விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது பாசிசம் கிடையாதா.? எதிர்க்கட்சிகள் ஒடுக்கப்படுவது பாசிசம் கிடையாதா.? அரசை எதிர்த்து கேள்வி கேட்டால் ஜெயில் என்ற வகையில் தமிழகத்தை ஆளும் திராவிட மாடல் அரசு பாசிசத்தை கையில் எடுக்கிறதா.? என்பதைத்தான் விஜய் கேட்டுள்ளார். மேலும் விஜய் கேட்ட கேள்விகள் அனைத்தும் சரியானது அதில் எந்த தவறும் கிடையாது என்று கூறினார்.