தமிழ்நாட்டின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், சீரடி சாய்பாபா கோயிலுக்கு திடீர் பயணம் செய்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் சீரடிக்கு புறப்பட்டுள்ளார். அவரது இந்தப் பயணத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் உடன் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய விஜய், தற்போது கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். வரும் செப்டம்பர் 23ஆம் தேதி கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், சாய்பாபாவின் ஆசிர்வாதம் பெற விஜய் சீரடிக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பிடத்தக்க வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய்யின் தாய் சோபாவிற்காக சென்னை கொரட்டூர் பகுதியில் சாய்பாபா கோயில் ஒன்று கட்டப்பட்டது. இந்த நிலையில், தற்போது விஜய் சீரடிக்கு சென்றுள்ளார் இது அவரின் தாயார் விருப்பத்தின் பெயரால் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.