பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் சமீபத்தில் அய்யனார் துணை என்ற புதிய சீரியல் பற்றிய தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது மற்றும் ஒரு புதிய சீரியலை தொடங்க இருக்கிறார்கள். தனம் என்று பெயரிடப்பட்ட அந்த சீரியலின் பிரமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.தனம் சீரியலில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்த சத்யா தேவராஜன் தான் கதாநாயகியாக நடிக்கிறார்.

அதேபோன்று வானத்தைப்போல தொடரில் சின்ராசாக நடித்த ஸ்ரீகுமார் தான் இந்த சீரியலில் ஹீரோவாக நடிக்கிறார். ஆனால் இந்த சீரியலின் தொடக்கத்திலேயே அவர் இறந்து விடுவது போன்றும் பணக்கஷ்டத்தில் இருக்கும் குடும்பத்தை தனம் ஆட்டோ ஓட்டி காப்பாற்றுவது போன்றும் கதை அமைந்துள்ளது. இந்த சீரியல் எந்த அளவிற்கு ரசிகர்களை கவர்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ப்ரோமோ வீடியோவை காண