
பிரபல பாடகியான சுசீத்ரா சமீபத்தில் பேட்டியளிக்கும் போது பல பரபரப்பான விஷயங்களை கூறி சர்ச்சையை கிளப்பினார். அவர் பிரபல தமிழ் திரைப்பட நடிகர்கள் போதை பொருட்களை பயன்படுத்துவதாக கூறியிருந்தார். இதனையடுத்து தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி மதுவிலக்கு மற்றும் ஆயிரத்தெருமை துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் பாடகி சுசித்ராவின் பேட்டியை சுட்டிக்காட்டி சினிமாத்துறையை சேர்ந்த நட்சத்திரங்கள் விஜய், தனுஷ், திரிஷா, ஆண்ட்ரியா ஆகியோரையும் டெஸ்ட் எடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.